Posts

Showing posts with the label #BREAKING | #Former | #Japanese | #Minister

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே காலமானார் 1283862731

Image
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே காலமானார் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கிழக்கு ஆசிய நாடான ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, 67. இவர் 2012 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை அந்நாட்டின் பிரதமராக பணியாற்றினார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உடல்நிலை காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், ஜப்பான் நாட்டின் நரா என்ற நகரத்தில், முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே இன்று நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். சாலை பகுதியில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் ஷின்சோ அபே பேசிக் கொண்டிருந்த போது அவர் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில், ஷின்சோ அபேவின் முதுகுப் பக்கம் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. இதனால், அவர் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். அதையடுத்து, அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு படையினர் படுகாயம் அடைந்து மயக்க நிலையில் இருந்த ஷின்சோ அபேவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சை ...