லேட் பண்ணாதீங்க .. ஆபீசர்களுக்கு ஸ்டாலின் போட்ட ஆர்டர்.. திட்டங்கள் குறித்து இன்றும் முதல்வர் ஆய்வு518037313
லேட் பண்ணாதீங்க .. ஆபீசர்களுக்கு ஸ்டாலின் போட்ட ஆர்டர்.. திட்டங்கள் குறித்து இன்றும் முதல்வர் ஆய்வு முதல்வர் ஸ்டாலின் அமலாக்கத்துறை மூலம் நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில், நகராட்சி, நீர்வளம், நெடுஞ்சாலை, பொதுப்பணி, தொழில், மின்சாரம் உள்ளிட்ட துறை செயலாளர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.. அப்போது, துறைச் செயலாளர்களிடம் ஆய்வுக் கூட்டத்தின் இறுதியில், முதல்வர் பேசியதாவது: "நான் பல மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்யும்போது பார்க்கிறேன், மக்கள் நம் மீது அதிகமான அளவிற்கு, மிகப் பெரிய எதிர்பார்ப்பினை வைத்துள்ளனர்.. தாமதம் வேண்டாம் அதனை பூர்த்தி செய்யும் வகையில் உங்கள் பணி சிறப்பாக அமைய வேண்டும். பெரும்பாலான மக்களுக்கு, குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு நலம் பயக்கும் திட்டங்களில் எந்தவிதமான தொய்வும், தாமதமும் இன்றி நீங்கள் பணியாற்றிட வேண்டும். கூடுமான வரையில், அனைத்துத் துறைகளும் திட்டங்களை நிறைவேற்றும்போது, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவற்றைச் செயல்படுத்த வேண்டும். நாம் தற்போது இந்த அரசின் இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். அரசாணை இன்னும் சில அறிவிப்புக...