லேட் பண்ணாதீங்க .. ஆபீசர்களுக்கு ஸ்டாலின் போட்ட ஆர்டர்.. திட்டங்கள் குறித்து இன்றும் முதல்வர் ஆய்வு518037313
லேட் பண்ணாதீங்க .. ஆபீசர்களுக்கு ஸ்டாலின் போட்ட ஆர்டர்.. திட்டங்கள் குறித்து இன்றும் முதல்வர் ஆய்வு
முதல்வர் ஸ்டாலின்
அமலாக்கத்துறை மூலம் நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில், நகராட்சி, நீர்வளம், நெடுஞ்சாலை, பொதுப்பணி, தொழில், மின்சாரம் உள்ளிட்ட துறை செயலாளர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.. அப்போது, துறைச் செயலாளர்களிடம் ஆய்வுக் கூட்டத்தின் இறுதியில், முதல்வர் பேசியதாவது: "நான் பல மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்யும்போது பார்க்கிறேன், மக்கள் நம் மீது அதிகமான அளவிற்கு, மிகப் பெரிய எதிர்பார்ப்பினை வைத்துள்ளனர்..
தாமதம் வேண்டாம்
அதனை பூர்த்தி செய்யும் வகையில் உங்கள் பணி சிறப்பாக அமைய வேண்டும். பெரும்பாலான மக்களுக்கு, குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு நலம் பயக்கும் திட்டங்களில் எந்தவிதமான தொய்வும், தாமதமும் இன்றி நீங்கள் பணியாற்றிட வேண்டும். கூடுமான வரையில், அனைத்துத் துறைகளும் திட்டங்களை நிறைவேற்றும்போது, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவற்றைச் செயல்படுத்த வேண்டும். நாம் தற்போது இந்த அரசின் இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம்.
அரசாணை
இன்னும் சில அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட வேண்டியுள்ளது. நடப்பு ஆண்டில் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதால், இவற்றில் அரசாணை வெளியிடப்பட்ட இனங்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, இம்மாத இறுதிக்குள் தேவையான அரசாணைகள் வெளியிடப்பட வேண்டும். எவ்வித தாமதமும் இன்றி, அவற்றை நடைமுறைப்படுத்தி, மக்களிடம் திட்டங்களின் பயன்களைக் கொண்டுபோய்ச் சேர்த்திட வேண்டும். அதுதான் மிகவும் முக்கியமானது. அதிலும் மிக முக்கியமானது - "கள அளவில் ஆய்வுகள்" மேற்கொள்வதாகும்" என்றார்.
திட்டங்கள்
அதாவது, பேருந்து நிலைய திட்டங்கள், குடிநீர், சாலை திட்டங்கள், வீட்டு வசதி, வேலைவாய்ப்பு திட்டங்கள் மக்கள் பெரிதும் எதிர்பார்க்கக்கூடிய திட்டங்களாகும்.. அரசின் சேவைகளான சான்றிதழ்கள், கட்டிட அனுமதி, பதிவுகள் மற்றும் உரமங்கள், தடையின்மை சான்றிதழ்கள் போன்றவற்றை வழங்குவதில் எந்த தாமதமும் இருக்கக்கூடாது என்பன போன்றவையே நேற்றைய தினம் முதல்வரின் உரையில் முத்தாய்ப்பாக அமைந்திருந்தது. இந்நிலையில், இதேபோல, இன்றைய தினம் 2வது நாளாக ஆய்வு கூட்டம் முதல்வர் தலைமையில் நடைபெறுகிறது..
19 துறைகள்
கூட்டுறவு மற்றும் உணவு, கல்வி, ஊரக வளர்ச்சி, சமூக நலம் உள்ளிட்ட துறை செயலர்கள் என 19 துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் முதல்வர் ஸ்டாலின். இத்துறை செயலர்களும், துறை சார்ந்த திட்டங்களின் நிலை குறித்து வீடியோ தொகுப்பு மூலம் விளக்க உள்ளனர்.. அப்போது பல்வேறு கேள்விகளை முதல்வர் எழுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அதிகாரிகள் வெலவெலத்து போயுள்ளனர்..!
Comments
Post a Comment