Posts

Showing posts with the label #Commercial | #Cylinder | #Italian | #Coffee

சிலிண்டர் விலை உயர்வு எதிரொலி - இட்லி, தோசை, காபி விலை உயர்வு

Image
சிலிண்டர் விலை உயர்வு எதிரொலி - இட்லி, தோசை, காபி விலை உயர்வு பெட்ரோல்-டீசலை போலவே கியாஸ் விலையும் உயர்ந்து வருகிறது. குறிப்பாக வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு சிலிண்டர் விலை ரூ.1300 ஆக குறைந்தது. தற்போது ரூ.2500 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு ஓட்டல் தொழிலை கடுமையாக பாதித்து உள்ளது. உணவு பண்டங்கள் அனைத்தின் விலையும் 5 முதல் 7 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளன. 30 ரூபாய்க்கு விற்பனையான 2 இட்லி ரூ.35 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் ரூ.25க்கு விற்கப்பட்ட காபி ரூ.28 முதல் ரூ.30 வரை உயர்த்தப்பட்டுள்ளது. டீ விலை ரூ.10ல் இருந்து ரூ.12 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் பூரி, பொங்கல், தோசை, கிச்சடி உள்பட அனைத்து வகை உணவுகளும் ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்ந்துள்ளது. மதிய சாப்பாடு ரூ.120 ல் இருந்து ரூ.130ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு குறித்து ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் ரவி கூறியதாவது:- சிலிண்டர் மட்டுமல்ல எண்ணெய், மளிகை என்று எல்லா பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளன. எனவே உணவு பண்டங்கள் மீதான விலை உயர்வு தவிர்க்க முடியாததாகி விட்டது. இதன...