நான் இன்னும் சாகவில்லை : நித்தியானந்தா பரபரப்பு அறிக்கை !!1729025116
நான் இன்னும் சாகவில்லை : நித்தியானந்தா பரபரப்பு அறிக்கை !! பாலியல் வழக்கில் சிக்கி சர்ச்சை சாமியாராக இருப்பவர் நித்தியானந்தா. இவர்மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருந்ததால் போலீசார் இவரை கைது செய்ய முயற்சித்தபோது அவர் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டார். பின்னர் கைலாச என்ற நாட்டை வாங்கி தன்னுடன் இருக்கும் சீடர்களுடன் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் பதிவுகளை வெளியிட்டு போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்தார். இந்நிலையில் இவர் இன்று வரையில் எங்கு இருக்கிறார் என்ற தகவல் கிடைக்காத நிலையில் கடந்த சில நாட்களாக நித்யானந்தா இறந்துவிட்டதாகவும் அவர் சமாதியில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த சூழலில் பிரபஞ்ச சக்தியோடு என் ஆத்மாவை கலக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். எனக்கு என்ன நோய் ஏற்பட்டிருக்கிறது என்றே மருத்துவர்களுக்குத் தெரியவில்லை. சமாதி நிலையில் இருக்கிறேன். ஆனால், நான் சாகவில்லை என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதோடு அவர் சேமித்து வைத்திருந்த தங்கம் எல்லாம் காணாமல் போனதால் இவர் இப்படி இருப்பதாக அவருடைய சீடர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், நித்தி தமிழகம் வருவதாக தகவல்கள்...