எடப்பாடி ராஜதந்திரம்! 54 நாட்களுக்கு முன் போடப்பட்ட விதை .. சீறி வந்த 20 பேர்! கலக்கத்தில் ஓபிஎஸ்? 1232287646
எடப்பாடி ராஜதந்திரம்! 54 நாட்களுக்கு முன் போடப்பட்ட விதை .. சீறி வந்த 20 பேர்! கலக்கத்தில் ஓபிஎஸ்? சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நேற்று ஒற்றை தலைமை குறித்து விவாதம் நடத்தப்பட்டது. இந்த விவாதத்திற்கான விதையை 54 நாட்களுக்கு முன்பே எடப்பாடி பழனிசாமி போட்டுவிட்டதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுக உட்கட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில். பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடத்தப்பட உள்ளது. வரும் 23ம் தேதி இந்த கூட்டம் நடத்தப்பட உள்ள நிலையில், கட்சியில் நிர்வாகிகள் மாற்றம் தொடர்பாக இந்த பொதுக்குழு, செயற்குழுவில் ஆலோசனை செய்யப்பட உள்ளது. மொத்தம் அதிமுகவில் 75 மாவட்டங்கள் அமைப்பு ரீதியாக உள்ளன. இதற்கான தேர்தல் இரண்டு கட்டமாக நடந்தது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 21ம் தேதி நடந்தது. இரண்டு கட்ட தேர்தல் முதல் கட்ட தேர்தல் சரியாக நேற்றில் இருந்து கணக்கு வைத்தால் 54 நாட்களுக்கு முன்பாக நடந்தது. இந்த முதல் கட்ட தேர்தலின் போது அதிமுகவில் பல கோஷ்டி மோதல்கள் இருந்தன. இந்த நிலையில் ஏப்ரல் 25ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடந்தது. இரண்டாம் கட்ட தேர்தலில் பெரிய அளவில் கோஷ்டி ...