எடப்பாடி ராஜதந்திரம்! 54 நாட்களுக்கு முன் போடப்பட்ட விதை .. சீறி வந்த 20 பேர்! கலக்கத்தில் ஓபிஎஸ்? 1232287646


எடப்பாடி ராஜதந்திரம்! 54 நாட்களுக்கு முன் போடப்பட்ட விதை .. சீறி வந்த 20 பேர்! கலக்கத்தில் ஓபிஎஸ்?


சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நேற்று ஒற்றை தலைமை குறித்து விவாதம் நடத்தப்பட்டது. இந்த விவாதத்திற்கான விதையை 54 நாட்களுக்கு முன்பே எடப்பாடி பழனிசாமி போட்டுவிட்டதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக உட்கட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில். பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடத்தப்பட உள்ளது. வரும் 23ம் தேதி இந்த கூட்டம் நடத்தப்பட உள்ள நிலையில், கட்சியில் நிர்வாகிகள் மாற்றம் தொடர்பாக இந்த பொதுக்குழு, செயற்குழுவில் ஆலோசனை செய்யப்பட உள்ளது.

மொத்தம் அதிமுகவில் 75 மாவட்டங்கள் அமைப்பு ரீதியாக உள்ளன. இதற்கான தேர்தல் இரண்டு கட்டமாக நடந்தது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 21ம் தேதி நடந்தது.

இரண்டு கட்ட தேர்தல்

முதல் கட்ட தேர்தல் சரியாக நேற்றில் இருந்து கணக்கு வைத்தால் 54 நாட்களுக்கு முன்பாக நடந்தது. இந்த முதல் கட்ட தேர்தலின் போது அதிமுகவில் பல கோஷ்டி மோதல்கள் இருந்தன. இந்த நிலையில் ஏப்ரல் 25ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடந்தது. இரண்டாம் கட்ட தேர்தலில் பெரிய அளவில் கோஷ்டி மோதல் இல்லை. இந்த தேர்தலில் பெரும்பாலும் எடப்பாடிக்கு ஆதரவான நிர்வாகிகள்தான் வாய்ப்பு பெற்றனர்.

 

எடப்பாடி ஆதரவு

அதாவது எடப்பாடிக்கு ஆதரவான நிர்வாகிகள்தான் பெரும்பாலும் புதிய பதவிகளை பெற்றனர். அதிமுகவில் தேர்தலில் போட்டியிட்டு வென்ற நிர்வாகிகளில் 90 சதவிகிதம் எடப்பாடி டீம் என்று அப்போதே கூறப்பட்டது. சென்னை மாவட்டங்கள், தூத்துக்குடி, குமரி, கொங்கு மாவட்டங்கள், என்று பல முக்கிய மாவட்டங்களில் உள்ள அமைப்பு ரீதியான மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலும் எடப்பாடி ஆதரவாளர்களுக்குத்தான் வாய்ப்பு வழங்கப்பட்டது..

 

வாய்ப்பு

தேனி, மதுரையில் மட்டும் கொஞ்சம் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வாய்ப்பு பெற்றனர். இதில் அதிகம் கவனம் ஈர்த்தது சேலம் புறநகர் மாவட்ட நியமனம்தான். சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக இளங்கோவன் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவர் எடப்பாடிக்கு மிகவும் நெருக்கமானவர். இப்படி பல மாவட்டங்களில் எடப்பாடி ஆதரவாளர்கள்தான் வாய்ப்பு பெற்றனர். அப்போதே எடப்பாடி பொதுக்குழுவை மனதில் வைத்து காய் நகர்த்துவதாக கூறப்படுகிறது. அதாவது செயற்குழு, பொதுக்குழுவில் தனக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்ற வசதியாக தனக்கு ஆதரவானவர்களுக்கு பதவி கொடுக்கிறார் என்று கூறப்பட்டது.

 

எடப்பாடிக்கு மிகவும் நெருக்கம்

தனக்கு ஆதரவானவர்களை நிர்வாகிகளாக நியமனம் செய்து, அதன் மூலம் ஒற்றை தலைமை விவாதம் வந்தால், தனக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றலாம் என்று பிளான் செய்து எடப்பாடி காய் நகர்த்தி வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில்தான் எதிர்பார்த்தபடியே நேற்று ஒற்றை தலைமை விவாதம் எழுந்தது. அப்போது எடப்பாடி ஆசியோடு பதவிக்கு வந்தவர்கள் அவருக்கு ஆதரவாக பேசி உள்ளனர். அன்று போட்ட விதை இன்று வளர்ந்து அவருக்கு நிழல் கொடுத்துள்ளது.

 

கூட்டம்

இனி பொதுக்குழுவிலும், செயற்குழுவிலும் ஒற்றை தலைமை குறித்து விவாதம் எழும்.. அதில் எடப்பாடிக்கு ஆதரவாக நிர்வாகிகள் குரல் கொடுப்பார்கள் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கிட்டத்தட்ட 20 நிர்வாகிகள் ஒற்றை தலைமை குறித்து பேசினார். முதலில் மாதவரம் மூர்த்திதான் ஒற்றை தலைமை பற்றி பேசி இருக்கிறார். அதன்பின் எம்ஆர் விஜயபாஸ்கர், சிவி சண்முகம், குறி கிருஷ்ணமூர்த்தி, திருத்தணி ஹரி, அருள்மொழி தேவர், சி விஜயபாஸ்கர், கோகுல் இந்திரா, வளர்மதி, ராஜன் செல்லப்பா, ஆர்பி உதயகுமார் ஆகியோர் பேசி உள்ளனர்.

 

என்ன பேசினார்கள்

இதில் பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடிக்கு ஆதரவாக பேசி உள்ளனர்,. மொத்தம் 20 நிர்வாகிகள் எடப்பாடிக்கு ஆதரவாக நேற்று பேசி உள்ளனர். மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக பேசி உள்ளனர். கட்சிக்கு ஒற்றை தலைமை அவசியம் தேவை. இல்லையென்றால் 2024 தேர்தலில் சமாளிக்க முடியாது, என்று கோஷம் எழுப்பி உள்ளனர்.

 

ஓபிஎஸ் புலம்பல்

ஆனாலும் தனக்கு ஆதரவாக பெரிய அளவில் குரல் கொடுக்கப்படவில்லை என்ற கலக்கத்தில் ஓபிஎஸ் தரப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அப்செட் ஆன அவர்.. எதாவது செய்ய வேண்டும். இல்லையென்றால் இருக்கிற லகானும் கையைவிட்டு போய்விடும் என்ற திட்டத்தில், சென்னையில் உள்ள வீட்டில் நிர்வாகிகளை சந்தித்து வருகிறாராம். தனக்கு எப்படியாவது ஆதரவு திரட்ட வேண்டும் என்று அவர் கூட்டத்தை நடத்தி வருகிறாராம்!

Comments

Popular posts from this blog