கடைசியில் ஜகா வாங்கிய எலான் மஸ்க்.. டிவிட்டர் நிர்வாக குழுவில் சேர மறுப்பு..!!


கடைசியில் ஜகா வாங்கிய எலான் மஸ்க்.. டிவிட்டர் நிர்வாக குழுவில் சேர மறுப்பு..!!


டிவிட்டர் நிறுவனத்தின் முக்கியப் பங்குதாரராக மாறிய எலான் மஸ்க் இந்நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் சேர்வது பற்றித் தொடர்ந்து ஆலோசனை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த வாரம் டிவிட்டர் சிஇஓ பராக் அகர்வால் நிர்வாகக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிர்வாகக் குழுவில் சேர்க்க முடிவு செய்தார்.

டிவிட்டர் சிஇஓ 

டிவிட்டர் சிஇஓ பராக் அகர்வால் தனது டிவிட்டர் பதிவில், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க், டிவிட்டர் நிர்வாகக் குழுவில் சேரும் வாய்ப்பை மறுத்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார். டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் நிர்வாகக் குழுவில் சேர்ந்து புரட்டிப்போடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மஸ்க் எடுத்த முடிவு அதிர்ச்சியாக உள்ளது.

 

பராக் அகர்வால் 

இதுகுறித்து பராக் அகர்வால், டிவிட்டர் நிர்வாகக் குழுவில் எலான் மஸ்க் சேர்வது பற்றிப் பல முறை ஆலோசனை செய்துள்ளோம், இணைந்து பணியாற்றுவதில் இருக்கும் பிரச்சனைகளைக் களைந்து நிர்வாகக் குழுவில் எலான் மஸ்க் இணைய இடம் அளிக்கப்பட்டது. இதற்காகச் செவ்வாய்க்கிழமை எலான் மஸ்க் டிவிட்டர் நிர்வாகக் குழுவில் இடம் அளிக்கப்பட்டது, ஆனால் அதே நாளில் எலான் மஸ்க் இந்த வாய்ப்புக்கு மறுப்பு தெரிவித்தார் எனப் பராக் அகர்வால் கூறியுள்ளார்.

எலான் மஸ்க் 

எலான் மஸ்க், டிவிட்டர் நிர்வாகக் குழுவில் சேரவில்லை என்றாலும் தொடர்ந்து பல மாற்றங்களை டிவிட்டர் தளத்தில் செய்து வருகிறார். டிவிட்டர் ப்ளூ சேவை மூலம் மிகவும் கடுப்பாக இருக்கும் காரணத்தால் அதை முடக்கியுள்ளதாக அறிவித்து உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

வாக்கெடுப்பு 

இதேபோல் TWITTER என்ற சொல்லில் W என்ற எழுத்தை நீக்கிவிட்டு TITTER என வைக்கலாமா..? டிவிட்டர் தலைமை அலுவலகத்தில் தற்போது யாரும் பணியாற்றாத காரணத்தால் வீடு இல்லாதோர் தங்கும் விடுதியாக மாற்றலாமா..? போன்ற கேள்விகளுக்கு வாக்கெடுப்பு நடத்தி வருகிறார். மேலும் எலான் மஸ்க்-ன் பல பதிவுகள் டிவிட்டர் நிர்வாகத்தை முகம் சுளிக்கவும் வைத்துள்ளது.

Comments

Popular posts from this blog