என்ன பாத்தா அப்டியா தெரியுது.?! விஜய் சேதுபதி கடுப்பேற்றிய அந்த பெண்.!


என்ன பாத்தா அப்டியா தெரியுது.?! விஜய் சேதுபதி கடுப்பேற்றிய அந்த பெண்.!


தமிழ் சினிமாவில் தனது நடிப்பின் மூலம் நல்ல ஒரு இடத்தை பிடித்து, நல்ல நடிகனாக வளர்ந்து நிற்கிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவரது திரைப்படங்கள் பெரிய வசூல் எல்லாம் செய்வது இல்லை. ஆனால், இவரது நடிப்பு பல உச்ச நட்சத்திரங்கலையே வியக்க வைக்கும் வண்ணம் இருக்கும்.

அதனால்தான் அடுத்தடுத்து உச்ச நட்சத்திரத்தின் படத்தில் இவர் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக விக்ரம் திரைப்படம் வரும் ஜூன் 3-ம் தேதி வெளியாக உள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன், பகத் பாசில் ஆகியோருடன் நடித்துள்ளார்.

விஜய் சேதுபதி நடிப்புக்கு எவ்வளவு ரசிகர்கள் ரசித்து பார்ப்பார்களோ, அதேபோல அவரது பேச்சுக்கும் ரசிகர்கள் ஏராளம். இவர் மிகவும் கஷ்டப்பட்டு நீண்டகாலமாக போராடி சினிமாத்துறைக்கு வந்தவர். அதனால், தனது அனுபவங்களை மக்களுக்கு தயங்காமல் சொல்லிவிடுவார். அதனாலேயே இவரது பேச்சு பலருக்கும் பிடித்த போய்விடும்.

இதுபற்றி அண்மையில் ஒரு பேட்டியில் விஜய் சேதுபதியுடன் தொகுப்பாளினி பேசும்போது, உங்களது பேச்சுக்கு நாங்கள் ரசிகர். அவ்வளவு ஆழமாக நீங்கள் பேசுகிறீர்கள். அர்த்தமுள்ளதாக நீங்கள் பேசுகிறீர்கள். என்று கூறியவுடன், விஜய் சேதுபதி, ‘ என்னை பார்த்தால் அப்படியா தெரிகிறது? நான் என்ன மேடைப்பேச்சாளரா?’ என்று செல்லமாக கடிந்து கொண்டார்.

இதையும் படியுங்களேன்  – இது வேற லெவல் உருட்டு.! பீஸ்ட் படத்திற்கு வந்துள்ள அந்த வாண்டு விளம்பரத்தை பாருங்க..,

நான் எனது அனுபவங்களை கூறுகிறேன். அதிலும் மேலோட்டமாக கூறினால் சிலர் அதனை தவறாக புரிந்து கொண்டு வேறு மாறி எழுதி விடுகின்றனர். அதனால் தெளிவாக விரிவாக அதனை எடுத்துக் கூறுகிறேன். அது உங்களுக்கு அப்படி தோன்ற வைத்திருக்கிறது என்று தனது தெளிவுரையும் கூறினார்.

விஜய் சேதுபதி நடிப்பில் இந்த வாரம் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ரிலீசாக உள்ளது. இந்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளார். சமந்தா, நயன்தாரா ஆகியோர் நடித்துள்ளனர்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

Comments

Popular posts from this blog