பைக்கில் குடும்பத்தோடு சென்ற போது நிலை தடுமாறி விழுந்ததில் 2 வயது குழந்தை பலி
திருப்போரூர்: இருசக்கர வாகனத்தில் குடும்பத்தோடு சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் 2 வயது குழந்தை உயிரிழந்தது. கூடுவாஞ்சேரி அடுத்த ஊரப்பாக்கம், ராம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (30). இவர் நேற்று மாலை 5.30 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளில் கேளம்பாக்கம் அடுத்த பொன்மார் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு குடும்பத்தோடு சென்று கொண்டிருந்தார்.
அப்போது மலைத்தெரு அருகே சென்ற போது நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து அனைவரும் கீழே விழுந்தனர். இதில் வாகனத்தின் முன் பக்கம் அமர்ந்திருந்த பிரகாஷின் மகன் லோகித் (2) பலத்த காயமடைந்தான். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் பிரகாஷ், மனைவி, குழந்தை ஆகிய 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ரத்தின...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment