சர்வதேச வலிப்பு நோய் விழிப்புணர்வு நாள்! ​​​​​​​வலிப்புநோய் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியவை...!


சர்வதேச வலிப்பு நோய் விழிப்புணர்வு நாள்! ​​​​​​​வலிப்புநோய் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியவை...!


சர்வதேச வலிப்பு நோய் விழிப்புணர்வு நாள் அல்லது ஊதா தினம் மார்ச் 26ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் உலகம் முழுவதும் மூளை வளர்ச்சி பிரச்சனைகள், அதனால் ஏற்படும் வலிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

வலிப்புநோய் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியவை

உலகளவில் 50 மில்லியன் பேர் வலிப்பு நோயால் வாழ்கின்றனர். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அகால மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்பு சாதாரண மக்களைக் காட்டிலும் 3 மடங்கு அதிகம். உலகளவில் 100 பேரில் ஒருவருக்கு வலிப்பு நோய் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மட்டும் சுமார் 2.2 மில்லியன் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். வலிப்பு எப்போது ஏற்படுகிறது என்பதை சரியாக கூறமுடியாவிட்டாலும், ஒரு சில சூழ்நிலைகளை குறிப்பிட்டு சொல்லலாம்.

1. வலிப்பு நோய்காக கொடுக்கப்பட்ட மருந்துகளை உட்கொள்ள மறந்துவிடுதல்

2. தூக்கம் இல்லாமை

3. சரியான நேரத்துக்கு உணவு எடுத்துக்கொள்ளாமை

4. வெறி, உற்சாகம், வருத்தம் போன்ற உணர்ச்சிப்பூர்வமான சூழல்

5. மாதவிடாய் சுழற்சி மற்றும் ஹார்மோன் மாற்றங்கள்

6. காய்ச்சல்

7. வேறு மருந்துகளை எடுத்துக்கொள்ளுதல்

8. கணிணி, தொலைக்காட்சிகளில் இருத்து வெளியாகும் ஒளி, மிகப்பெரிய அளவிலான ஒளிரும் விளக்குகளில் இருந்து வெளியாகும் ஒளி, சில சமயங்களில் சூரிய ஒளி கூட பாதிக்கும்.

Comments

Popular posts from this blog

டைட்டானிக் கப்பலை பார்க்க நீர்மூழ்கியில் சென்று மாயமான 5 பேர்.. இறந்து விட்டார்கள்..?அதிர்ச்சி தகவல்

9 Little Ways You Can Raise Your Vibe Right Now #RightNow