தமிழகத்தில் நாளை வழக்கம் போல் பேருந்துகள் இயங்குமா?.. தொமுச தகவல்


தமிழகத்தில் நாளை வழக்கம் போல் பேருந்துகள் இயங்குமா?.. தொமுச தகவல்


விலை வாசி உயர்வு, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கண்டிப்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த 12  அம்ச கோரிக்கைகள் பின் வருமாறு, தொழிலாளர் சட்டங்களை லேபர் கோட்ஸ் என்ற பெயரில் தொழிலாளர் விரோதச் சட்டங்களாக மாற்றியதை ரத்துசெய்ய வேண்டும், அத்தியாவசிய பாதுகாப்புப் பணிகள் சட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும், சம்யுக்த கிசான் மோர்ச்சா முன்வைத்துள்ள இதர ஆறு கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது, அங்கன்வாடி,‘ஆஷா’ ஊழியர்கள், மதிய உணவு ஊழியர்களுக்கும் இதரத் திட்ட ஊழியர்களுக்கும்  குறைந்தபட்ச ஊதியத்துடன் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், முறைசாராத் தொழிலாளர்கள் அனைவருக்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களைக் கொண்டுவர வேண்டும், வருமானவரி செலுத்தாத அனைத்துக் குடும்பத்தினருக்கும் மாதந்தோறும் 7,500 ரூபாய் அளிக்க வேண்டும், மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின் கீழ் ஒதுக்கீட்டை அதிகப்படுத்தி, இதனை நகர்ப்புறங்களுக்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும், கொரோனா வைரஸ் தொற்றின்போது பணியாற்றிய முன்னணித் தொழிலாளர்கள் அனைவருக்கும் முறையான பாதுகாப்பு மற்றும் காப்பீடு வசதிகளை அளிக்க வேண்டும், வேளாண்மை, கல்வி, சுகாதாரம் மற்றும் முக்கியமான பொதுப் பணிகளில் பொது முதலீட்டை அதிகரித்திட வேண்டும்,  பணக்காரர்கள் மீது செல்வ வரி விதிக்க வேண்டும், பெட்ரோலியப் பொருட்களின் மீதான கலால் வரியைக் கணிசமாகக் குறைத்திட வேண்டும், ஒப்பந்த ஊழியர்கள், திட்ட ஊழியர்கள் அனைவருக்கும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், தேசியப் பணமாக்குத் திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் ஆகியவை ஆகும். 

மேலும் படிக்க | தமிழகத்தில் 67% பேருந்துகள் இயங்கவில்லை...வேலை நிறுத்தத்தால் மக்கள் அவதி

பொது வேலை நிறுத்தத்தின் எதிரொலியாக தமிழகத்தில் இன்று 30 சதவீதம் பேருந்துகளே இயக்கப்படுகின்றன. தலைநகர் சென்னையில் 10% பேருந்துகளே இயங்குகின்றன. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். புறநகர் ரயில் நிலையங்களில் நெரிசல் ஏற்பட்டது. ஆட்டோ உள்ளிட்ட தனியார் போக்குவரத்தில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது. வேலை நிறுத்தம் நாளையும் தொடரவுள்ளதால், நாளையும் மக்கள் இதே சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுமோ என்ற கேள்வி எழுந்தது. ஆனால், பொதுமக்களின் நலன் கருதி நாளை 60% பேருந்துகள் இயங்கும் எனவும், முன்னணி நிர்வாகிகள் மட்டும் போராட்டத்தில் கலந்துகொள்வார்கள் எனவும் தொமுச அறிவித்துள்ளது. போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தொமுச பொருளாளர் நடராஜன் இதனை தெரிவித்தார். 

மேலும் படிக்க | இன்றும் நாளையும் வங்கி சேவை பாதிக்கப்படலாம்! முக்கிய தகவல் வெளியீடு

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Comments

Popular posts from this blog