சோமேட்டோ Instant: 10 நிமிட டெலிவரி எப்படிச் சாத்தியம்..? தீபிந்தர் கோயல் பலே விளக்கம்..!


சோமேட்டோ Instant: 10 நிமிட டெலிவரி எப்படிச் சாத்தியம்..? தீபிந்தர் கோயல் பலே விளக்கம்..!


இந்தியாவில் டெலிவரி சேவைகள் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது, இதனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் வரைவான சேவைக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. உதாரணமாகச் சோமேட்டோ ஆப்-ல் வாடிக்கையாளர்கள் விரைவாக டெலிவரி செய்யும் உணவகங்களைப் பில்டர் செய்து ஆர்டர் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில் Blinkit நிறுவனம் ஒட்டுமொத்த டெலிவரி சேவையை மாற்றியுள்ளது. Blinkit நிறுவனத்தின் விரைவான டெலிவரி சேவை அனைத்து நிறுவனங்களையும் விரைவாக டெலிவரி செய்யத் தூண்டியுள்ளது. இந்த நிலையில் சோமேட்டோ இந்த விரைவான டெலிவரி சேவையை அறிமுகம் செய்யவில்லை எனில் போட்டி நிறுவனங்கள் அறிமுகம் செய்யும்.

சோமேட்டோ இன்ஸ்டென்ட் என்ற பெயரில் 10 நிமிடத்தில் டெலிவரி சேவை மூலம் டெலிவரி பார்ட்னர் (டெலிவரி பாய்ஸ்) மீது எவ்விதமான திணிப்பும் செய்யப்போவது இல்லை, இதேபோல் போல் 30 நிமிட டெலிவரிக்கு இருக்கும் அதே பாதுகாப்பு 10 நிமிட டெலிவரியிலும் உள்ளது என நாங்கள் உறுதி அளிக்கிறோம்.

மேலும் தாமதமான டெலிவரிக்கும் எவ்விதமான அபராதம், போனஸ் கழிப்பு, சம்பளம் பிடித்தல், கமிஷன் குறைத்தல், ரேட்டி குறைப்பு போன்ர எவ்விதமான நடவடிக்கையும் டெலிவரி பார்ட்னர் மீது எடுக்கமாட்டோம் எனச் சோமேட்டோ நிறுவனர் மற்றும் சிஇஓ தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 10 நிமிட டெலிவரி எப்படிச் சாத்தியம்..? என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இந்த 10 நிமிட டெலிவரி சேவைக்காக முக்கியமான வர்த்தகப் பகுதிகள் அனைத்தையும் புதிதாக Finishing station என்பதை அமைக்கப்பட உள்ளது.

Finishing station அமைத்தல்

இந்த Finishing station இருக்கும் பகுதியில் தத்தம் பகுதி மக்கள் அதிகமாக எதை ஆர்டர் செய்கிறார்கள் என்பதைச் சாப்ட்வேர் மூலம் கணித்துக்கொண்டு முன்கூட்டியே முக்கியமான உணவகங்களில் இருந்து 20 முதல் 30 உணவு பார்சல்களை ரெடியாக வைத்துக்கொள்வோம்.

இதன் மூலம் ஹைப்பர்லோக்கல் டெலிவரி முறையை அமலாக்கம் செய்து 10 நிமிட டெலிவரியை சாத்தியப்படுத்த உள்ளோம். இதனால் உணவு தரம், பேக்கிங் போன்றவற்றில் எவ்விதமான சமரசமும் செய்யப்படுவது இல்லை.

 அதிகப்படியான லாபம்

இதேவேளையில் வேகமாக டெலிவரி, அதிகப்படியான லாபம் பெற முடியும் எனச் சோமேட்டோ நிறுவனர் மற்றும் சிஇஓ தீபிந்தர் கோயல் டிவிட்டரில் பல டிவீட்டுகளில் விளக்கம் கொடுத்துள்ளார். இதன் மூலம் பல லட்சம் மக்களின் கேள்விக்குப் பதில் அளித்துள்ளார் தீபிந்தர் கோயல்.

Comments

Popular posts from this blog