5 ஆண்டுகளுக்கு பின்னர் ரீ என்ட்ரி கொடுத்த ரிப்பன் நடிகை…. குஷியில் ரசிகர்கள்….!
5 ஆண்டுகளுக்கு பின்னர் ரீ என்ட்ரி கொடுத்த ரிப்பன் நடிகை…. குஷியில் ரசிகர்கள்….!
கோலிவுட்டில் இதுவரை எத்தனையோ புது முக நடிகைகள் அறிமுகமாகி வந்த சுவடே தெரியாமல் காணாமல் போயுள்ளனர். அதில் சிலர் மட்டுமே கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு தற்போது வரை நிலைத்து உள்ளனர்.
அந்த வகையில் முதல் படத்திலேயே தன் வசீகரிக்கும் அழகால் ரசிகர்களை கவர்ந்து டாப் நடிகையாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென காணாமல் போனவர் தான் நடிகை ஸ்ரீதிவ்யா. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஊதா கலர் ரிப்பனாக வலம் வந்த ஸ்ரீதிவ்யா அதன் பின்னர் அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார்.
காக்கி சட்டை, ஜீவா, மருது, ஈட்டி என பல நடிகர்களுடன் இணைந்து நடித்த ஸ்ரீதிவ்யா யாரும் எதிர்பாராத நிலையில் திடீரென பட வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவை விட்டே விலகி விட்டார். கிட்டத்தட்ட கடந்த ஐந்து ஆண்டுகளாக அவரை எந்த ஒரு புதிய படத்திலும் பார்க்க முடியவில்லை.
இந்நிலையில் நேற்று ஸ்ரீதிவ்யா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ஒன்று மலையாளத்தில் வெளியாகி உள்ளது. இதன் மூலம் ஸ்ரீதிவ்யா மலையாளத்தில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். அதன்படி டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் உருவாகியுள்ள ஜனகனமன என்ற படத்தில் ஸ்ரீதிவ்யா நடிகர் பிருத்விராஜுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இந்த படம் தமிழிலும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த படம் ஸ்ரீதிவ்யாவுக்கு மலையாளத்தில் ஒரு வெற்றிகரமான ரீ என்ட்ரியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து விரைவில் அவர் தமிழ் சினிமாவிலும் ரீ என்ட்ரி கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்கள்.
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Comments
Post a Comment