ராமநவமி ஊர்வலத்தில் கல்வீச்சு விவகாரம்… தகவல் கொடுத்தால் சன்மானம்… அறிவித்தது ம.பி. காவல்துறை!!
மத்தியபிரதேச மாநிலம் கார்கோனில் ராம நவமி ஊர்வலத்தின் போது கல் வீச்சு நடத்தப்பட்டது குறித்து தகவல் கொடுத்தால் 10 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என மத்திய பிரதேச காவல்துறை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் ராம நவமி கடந்த 10 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி மத்தியப்பிரதேசம், குஜராத், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊர்வலங்கள் நடைபெற்றன. அதில் மத்தியப்பிரதேச மாநிலம் கார்கோன் பகுதியில் நடைபெற்ற ஊர்வலம் கலவரமாக மாறியது. வேறொரு சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதியில் ஊர்வலம் சென்ற போது ஒலிப்பெருக்கிகளை சத்தமாக இசைப்பது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, ஊர்வலம் பாதியிலேயே தடைபட்டு இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். இதில்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment