எதிர் நீச்சல் போட தயாராகும் ஜனனி.. சக்தி யார் பக்கம்?
எதிர் நீச்சல் சீரியலில் ஆதி குணா குடும்பத்தின் சுயரூபம் என்னவென்று ஜனனிக்கு தெரிந்து விட்டது. இதிலிருந்து மீள ஜனனி, எதிர்நீச்சம் போட தயாராகி விட்டார். அவருடன் சக்தி துணை நிற்பாரா? என்ற கேள்வி தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
எதிர்நீச்சம் சீரியல் டெலிகாஸ்ட் ஆக தொடங்கிய முதல் நாளிலிருந்து திரைக்கதையில் படு வேகமாக சென்றுக் கொண்டிருக்கிறது. தந்தையின் கனவே தனது கனவாக நினைத்து வாழ்ந்த ஜனனி, கடைசியில் ஆதி குணசேகரின் குடும்பத்தால் முட்டாள் ஆக்கப்பட்டது ஜனனிக்கு தெரிந்து விட்டது. மற்ற 3 மருமகள்களை போலவே ஜனனியும் வீட்டில் கொத்தடிமையாக இருக்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம். இத்தனை நாட்களாக ஆபீஸ், எம்.பி ஆக்குகிறோம் என ஜனனியை மொத்த குடும்பமும் ஏமாற்றி வந்தனர்.
Comments
Post a Comment