வகுப்பறைகளுக்குள் செல்போன் எடுத்து வர தடை: அதிரடி உத்தரவு


வகுப்பறைகளுக்குள் செல்போன் எடுத்து வர தடை: அதிரடி உத்தரவு


பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் செல்போன் எடுத்து வரக்கூடாது என வேலூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பிரிவு உபச்சார விழா நடத்த அனுமதிக்கவில்லை என்பதால் வகுப்பறையில் இருந்த மேசை நாற்காலிகளை மாணவர்கள் போட்டு உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .

இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலானதை அடுத்து மாணவர்கள் மீது கடும் விமர்சனங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன் அவர்கள் மாணவர்கள் செல்போன்களை வகுப்பறைகளுக்கு எடுத்து வரக்கூடாது என்று வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த உத்தரவை மீறி செல்போன்கள் எடுத்து வரும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் எச்சரித்துள்ளார். வகுப்பறைகளுக்கு மாணவர்கள் செல்போன் எடுத்து வரக்கூடாது என்ற மாவட்ட ஆட்சித்தலைவரின் இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Spread the love

Comments

Popular posts from this blog