கலைஞர் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும்! முதல்வர் அறிவிப்பிற்கு பிற கட்சிகள் வரவேற்பு
கலைஞர் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும்! முதல்வர் அறிவிப்பிற்கு பிற கட்சிகள் வரவேற்பு
இன்று தமிழக பேரவையில், 5 முறை முதல்வராகவும் 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்த கலைஞர் கருணாநிதியின் சாதனைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
அப்போது அவர்,
"இதுதான் தமிழகத்தின் அடையாளங்கள் என்றால் அந்த அடையாளங்களை எல்லாம் உருவாக்கியவர் நம்முடைய முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் ஆவார். தமிழகத்தில் மட்டுமல்ல பரந்து விரிந்த இந்த இந்திய அரசியலுக்கு வழிகாட்டியாக இருந்தவர் தலைவர் கலைஞர் ஆவார். முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3 ஆம் நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும்" என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
மேலும் அவர், "சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் கம்பீர தோற்றத்துடன் முத்தமிழ் அறிஞர் கலைஞர் சிலை நிறுவப்படும்" என்று அறிவித்தார்.
முதல்வரின் இந்த அறிவிப்பிற்கு ஆதரவு தெரிவித்து பிற உறுப்பினர்கள் பேசினர்.
வேல்முருகன் பேச்சு :
60ஆண்டு காலம் மாமன்றத்திலும், 19ஆண்டு காலம் முதல்வராகவும், உலக தமிழர்களின் உரிமை குரலாகவும் தலைவர் கலைஞர் அவருக்கென்றே எடுத்த அற்புதமான சொற்களாக உள்ளது. தலைவர் கலைஞர் பிறந்தநாள் ஜூன் 3 அரசு விழாவாக கொண்டாடப்படுவது காலத்தால் அழியாத வரலாற்று சுவடு.
அத்தனை துறையிலும் கலைஞரை மிஞ்சியவர் எவரும் இல்லை..
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிக்கப்பட்டு இருக்கின்ற அத்தனை வரலாற்றுச் செய்திகளும் நாளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்கின்ற ஒன்று அறிவிப்புகளை பார்க்க என்பதை கூறி இதனை வரவேற்கிறேன் வாய்ப்புக்கு நன்றி வணக்கம்.
மமக உறுப்பினர் அப்துல் சமது பேச்சு :
கலைஞர் பிறந்தநாள் விழா அரசு விழாவாக அறிவித்தது மனதார வரவேற்கிறோம்.. நீண்ட நெடிய பொதுவாழ்விற்கு எடுத்துக்காட்டாக இருந்தவர் தலைவர் கலைஞர்.
கலைஞரின் செங்கோலும், எழுதுகோலும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருக்கிறது என்ற வரலாறு தொடர்கிறது.
இ.கம்யூ.உறுப்பினர் மாரிமுத்து பேச்சு :
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இதனை பெருமையோடு வரவேற்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள அடித்தட்டு மக்கள் வாழ்வியலை தூக்கி தலைநிமிர செய்த மகத்தான தலைவர் கலைஞர்.. அவருக்கான பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடுவது உண்மையிலேயே பெருமை.
விசிக உறுப்பினர் சிந்தனைச் செல்வன் :
மக்களுக்காக வாழ்பவர்கள் வரலாறாக வழிநடத்தி செல்வார்கள். தமிழ் சமூகத்திற்கான வெளிச்சமாக முத்தமிழறிஞர் கலைஞர் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பார். முத்தமிழறிஞர் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்தது நெஞ்சார்ந்த நன்றி..
மா.கம்யூ.உறுப்பினர் நாகை மாலி :
இந்திய அரசியலை ரிமோட் கண்ட்ரோலில் இயக்கியவர் தலைவர் கலைஞர்.
Comments
Post a Comment