தளபதி விஜய்யுடன் இணையும் தல- யா !!… வெளியான முக்கிய அறிவிப்பு!!…
தளபதி விஜய்யுடன் இணையும் தல- யா !!… வெளியான முக்கிய அறிவிப்பு!!…
தல தோனி,இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்ற பின் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி கொண்டிருக்கும் இவருக்கு தனியாக ரசிகர்கள் பட்டாளமே இருக்கு. அதை வைத்து வியாபாரம் பண்ணலாம் என்ற நோக்கில் ஈடுபட்டு வருகிறார் தல டோனி.
அதற்க்கு அவர் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் தமிழ் சினிமா. முதல் கட்டமாக சென்னையில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். அதுவும் திருவான்மியூரில் ஆபீஸ் போட்டிருக்கிறார்.
தற்போதுள்ள நடிகர் நடிகைகளும் புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதன் மூலம் வருமானம் கிடைக்கும் என்ற நோக்கில் இருக்கும் நிலையில் தோனியும் அதையே பின்பற்ற உள்ளார்.
தமிழ் சினிமாவில் நயன்தாரா படம் நல்ல வசூலை பெற்று வருவதால் நயன்தாரா வைத்து பட எடுக்க திட்டமிட்டுள்ளார். நயன்தாரா தற்போது ஷாருகான்க்கு ஜோடியாக லயன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதைத் தொடர்ந்து ஜூன் 9ஆம் தேதி நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடக்க உள்ளதாக செய்திகள் வெளியாகிஉள்ளது. இதனால் சில மாதங்களுக்குப் பிறகு தயாரிப்பில் நயன்தாரா நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து தோனி என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கூறுகையில் தோனி சஞ்சய் என்கிற பெயரில் யாருடனும் பணியாற்றவில்லை எங்கள் நிறுவனம் தற்போது யாரையும் பணியமர்த்தவில்லை அதனால் யாரும் இது போன்ற போலியான தகவல்களை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
அஜித் AK 61 படத்தின் டைட்டில் இதுதானா?.. வெளியான வேற லெவல் அப்டேட்!!
மேலும் எங்கள் தயாரிப்பு குழு வேறு ஒரு வித்தியாசமான திட்டத்தை செய்து வருகிறது. விரைவில் அந்த அற்புதமான திட்டம் குறித்து உங்களுடன் பகிர்ந்து கொள்வோம் அதுவரையில் காத்திருங்கள் என கூறப்பட்டது.
விஜய் மற்றும் டோனி நெருங்கிய நண்பர்கள் என்பதால் முதலில் தோனி விஜயிடம் படம் பண்ணலாமா என்று கேட்டபோது நான் இரண்டு மூன்று படங்களில் ஏற்கனவே கமிட் ஆகி விட்டேன் வரும் காலங்களில் நாம் இணைந்து பணியாற்றுவோம் எனக் கூறிதாக தகவல் வெளிவந்துள்ளது.
சென்னையில் வரும் காலம் ஐபிஎல் அணியை வாங்கி நடத்தும் திட்டமிமும் தோனிக்கு இருப்பதாக கூறப்படுகிறது.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Related Topics:தல தோனி, தளபதி விஜய்
Click to comment
Comments
Post a Comment