உஷார்.. உங்கள் ஸ்மார்ட்போனில் நீங்கள் டைப் செய்யும் அனைத்தையும் ஹேக் செய்யயலாம் - பாதுகாப்பது எப்படி?


உஷார்.. உங்கள் ஸ்மார்ட்போனில் நீங்கள் டைப் செய்யும் அனைத்தையும் ஹேக் செய்யயலாம் - பாதுகாப்பது எப்படி?


நாம் பயன்படுத்தும் அனைத்து விதமான டிவைஸ்களிலும் தினசரி டைப்பிங் (தட்டச்சு) பணிகளை செய்கிறோம். அது உங்கள் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரோடு இணைக்கப்பட்டிருக்கும் நேரடி கீபோர்ட் என்றாலும் சரி அல்லது உங்கள் ஸ்மார்ஃபோன்களில் உள்ள விர்ச்சுவல் கீபேட் என்றாலும் சரி, ஏதோ ஒரு வகையில் நாம் டைப்பிங் செய்கிறோம்.

ஆனால், நீங்கள் எந்த வகை கீபோர்ட் பயன்படுத்தினாலும், அதை சுற்றியிலும் ஆபத்து சூழ்ந்திருக்கிறது. குறிப்பாக, நீங்கள் என்ன டைப்பிங் செய்கிறீர்கள் அல்லது எந்த கீஸ்டிரோக் பயன்படுத்துகிறீர்கள் என்ற டேட்டாவை ஆன்லைன் ஹேக்கர்கள் தெரிந்து கொள்ள முடியும் என்பதே அதில் உள்ள ஆபத்தாக அமைந்துள்ளது.

இந்த ஊடுருவலுக்கு பெயர் கீலாக்கிங் ஆகும். இதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்படும் மால்வேர் மூலமாக உங்கள் டிவைஸில் ஊடுருவல் நடக்கும். அதை தொடர்ந்து, நீங்கள் எந்தெந்த கீ பயன்படுத்துகிறீர்கள் என்ற விவரம் சேகரிக்கப்படும்.

தொழில்நுட்ப உலகம் ஒருபக்கம் வளர்ந்து கொண்டே செல்கிறது என்றாலும் கூட, அதற்கேற்ப ஹேக்கர்கள் மிக ஸ்மார்ட்டாக நமது தகவல்களை திருடும் உத்தியும் மேம்பட்டுக் கொண்டே வருகிறது.

கண்டுபிடிப்பது சிரமம் :

கீலாக்கர் மால்வேர் என்பது மிகவும் பிரபலமான ஒன்றாக இருக்கிறது. உங்கள் டிவைஸில் டேட்டா திருடப்படுகிறது என்பதை நீங்களாகவே கண்டுபிடிக்காவிட்டால், அதை தெரிந்து கொள்வதற்கான தொழில்நுட்ப உத்திகள் என்பது மிகவும் அரிதானதாக இருக்கிறது. ஆகவே, கீலாக்கர் மால்வேர் என்றால் என்ன, அதைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் எப்படி உங்களை டிவைஸ் தகவல்களைத் திருடுகின்றனர். அதில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி என்ற விஷயங்களை எல்லாம் இந்த செய்தி மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

Read More : பாஸ்வேர்ட் இல்லாமல் லாக்-இன்: ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட்டின் அடுத்த மூவ்!


கீலாக்கர் என்றால் என்ன?

இணையதளங்களில் நீங்கள் விவரங்களை தேடும்போது, நண்பர்களுக்கு மெசேஜ் அனுப்பும்போது அல்லது ஆன்லைனில் பொருட்களை வாங்க முயற்சிக்கும் போது, நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு கீஸ்டிரோக் குறித்த விவரம் தான் கீலாக்கர். இந்த விவரங்கள் அனைத்தும் கீபோர்ட் சாஃப்ட்வேர் அல்லது கீபோர்ட் ஆப்களில் சேமிக்கப்பட்டிருக்கும். குறிப்பாக, யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டு உள்பட அனைத்தும் இதில் சேமிக்கப்படும்.

கீலாக்கர் மால்வேர் :

இது வைரஸ் கொண்ட ஒரு சாஃப்ட்வேர் ஆகும். உங்கள் தகவல்களை திருடுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, உங்கள் கீஸ்ட்ரோக் தகவல்கள் அனைத்தையும் ஹேக்கர்கள் எடுத்துக் கொள்ள இது உதவியாக அமையும்.

மால்வேரில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி?

இரண்டடுக்கு பாதுகாப்பு முறையை பின்பற்றவும்: உங்கள் டிவைஸ் மற்றும் டிஜிட்டல் அக்கவுண்ட்களை பாதுகாக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் டூ ஃபேக்டர் ஆதண்டிகேஷன் பாதுகாப்பு முறையை பயன்படுத்துங்கள்.

அன்-னோன் சோர்ஸ் ஃபைல்களை டவுன்லோடு செய்ய வேண்டாம்

உங்கள் டேட்டா பாதுகாப்பு உங்கள் கைகளில் இருக்கிறது. அதாவது, அங்கீகாரம் அற்ற மூன்றாம் தரப்பு இணையதளங்கள் அல்லது இ-மெயில் முகவரியில் இருந்து எந்தவொரு டேட்டாவையும் டவுன்லோடு செய்ய வேண்டாம்.

Comments

Popular posts from this blog

Fred again and the Blessed Madonna eulogize the dance floor on a Marea Wea ve Lost Dancing a #Dancing

Rice And Cabbage In Sauce Lahanorizo #Cabbage

ரயில்வே ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. மத்திய அரசின் செம அறிவிப்பு..! #DA