யுவனுக்கு கார்த்தி கொடுத்த பரிசு - வைரலாகும் புகைப்படம்


யுவனுக்கு கார்த்தி கொடுத்த பரிசு - வைரலாகும் புகைப்படம்


இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது திரையுலக வாழ்க்கையில் 25 வருடங்களை நிறைவு செய்துள்ளார். இதனையொட்டி அவருக்கு சமீபத்தில் விழா எடுக்கப்பட்டது. இந்த விழாவில் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு யுவனுடனான தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.

மேலும் கவிஞர் நா. முத்துக்குமாருடைய மகன் ஆதவன் முத்துக்குமார் போகாதே போகாதே பாடலை முத்துக்குமார் - யுவன் நட்பை வைத்து எழுதியிருந்தார். அந்தப் பாடலையும் யுவன் மேடையில் பாடினார்.

இந்த விழாவில் இயக்குநர் பா. இரஞ்சித், தியாகராஜா குமாரராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவில் பங்கேற்றவர்கள் யுவன் பாடல்கள் குறித்தும், யுவன் குறித்தும் பல விஷயங்களை பேசினர்.

இந்நிலையில் திரையுலகில் 25 வருடங்களை நிறைவு செய்திருக்கும் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு நடிகர் கார்த்தி விலையுயர்ந்த வாட்ச் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். கார்த்தியும், யுவனும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Yuvan

யுவன் ஷங்கர் ராஜா கார்த்திக்கு பருத்திவீரன், பையா, நான் மகான் அல்ல, பிரியாணி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். தற்போது கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் விருமன் படத்தில் யுவன் இசையமைத்த கஞ்சா பூவு கண்ணால என்ற பாடலின் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | துபாய் பறந்த நெல்சன் திலீப்குமார் - எதற்கு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Comments

Popular posts from this blog