எச்சரிக்கை! இந்த ஆண்டிராய்டு ஆப்ஸ் இருந்தால் நீங்கள் உடனடியாக நீக்கவும்


எச்சரிக்கை! இந்த ஆண்டிராய்டு ஆப்ஸ் இருந்தால் நீங்கள் உடனடியாக நீக்கவும்


மொபைல், இன்டெர்நெட், சோசியல் மீடியா வலைத்தளங்கள் என்று தொழில்நுட்பம் இல்லாத இடங்களே கிடையாது. அன்றாட வாழ்வில் எழுப்புவதற்கு முதல் தூங்குவதற்கு வரை பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் ஸ்மார்ட்போன் மூலம் நம் வாழ்வின் ஒரு அங்கமாகி இருக்கின்றது. இணையதளத்தில், மொபைல் ஆப்ஸ்களில் மற்றும் ஸ்மார்ட்போன்களில் எவ்வளவு ஜாக்கிரதையாக இயங்க வேண்டும் என்று தொடர்ந்து பாதுகாப்பு வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டு வந்தாலும், சில நேரங்களில் கோட்டை விட்டுவிடுகிறோம். அதில், ஃபேஸ்புக் மூலம் லாகின் செய்யும் ஒரு சில ஆப்ஸ் உங்கள் சென்சிட்டிவ் டேட்டாவை திருடி வருவதாக எச்சரிக்கை அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

தொழில்நுட்பம் வாழ்க்கையை பல சில இடங்களில் மிகவும் எளிதாக்கி இருக்கிறது. உங்களுக்கு இணையத்தில் பல சேவைகளுக்கு பல்வேறு கணக்குகள் இருந்தால், உதாரணமாக சமுக வலைத்தள கணக்கு, மின்னஞ்சல் கணக்கு, ஷாப்பிங் சைட்டுகளின் கணக்கு என்று இருக்கும்போது, நீங்கள் ஒவ்வொரு கணக்கிற்கும் ஒவ்வொரு முறையும் லாகின் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதே போல தான் மொபைல் ஆப்ஸ் லாகின் செய்வதும். மொபைல் ஆப்ஸில் நீங்கள் ஒரு முறை மின்னஞ்சல் அல்லது ஃபேஸ்புக் மூலம் லாகின் செய்தாலே அது அப்படியே இருக்கும். இது ஒவ்வொரு முறை லாகின் செய்வதில் இருந்து நேரத்தை மிச்சப்படுத்தும்.

Also Read : உஷார்.. உங்கள் ஸ்மார்ட்போனில் நீங்கள் டைப் செய்யும் அனைத்தையும் ஹேக் செய்யயலாம் - பாதுகாப்பது எப்படி?

உங்கள் மொபைல் மற்றும் லேப்டாப்பை நீங்கள் மட்டும் தான் பயன்படுத்துகிறார்கள் என்றாலும் உங்களுடைய டேட்டா அனைத்துமே, நீங்கள் பயன்படுத்தும் செயலிகளால் சேகரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஃபேஸ்புக் வழியே லாகின் செய்ய அனுமதிக்கும் சில ஆப்ஸ் மூலம் நம்முடைய தனிப்பட்ட விவரங்கள் மற்றும் மிகவும் சென்சிட்டிவான தகவல்களை சைபர் கிரிமினல்கள் திருடி வருகின்றனர் என்று அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது.

உங்கள் மொபைலில் பின்வரும் ஆண்டிராய்டு ஆப்ஸ் இருந்தால் நீங்கள் உடனடியாக நீக்க வேண்டும்.

* Daily Fitness OL – உங்கள் பிட்நெஸ் செயல்பாடுகள் பற்றி டிராக் செய்யும் செயலி, உங்கள் ஃபேஸ்புக் பாஸ்வேர்டை பயன்படுத்தி அதன் மூலம் தகவல்களைத் திருடுகிறது
* Enjoy Photo Editor – சமீபகாலமாக பல விதமான போட்டோ எடிட்டர் செயலிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. அதில் நீங்கள் தவிர்க்க வேண்டியது இந்த செயலி.
* Panorama Camera – புகைப்படங்களை வெவ்வேறு கோணத்தில் எடுக்க பயன்படும் செயலி.
* Photo Gaming Puzzle – புகைப்படங்களை சரியாக வைக்கும் புதிர் விளையாட்டு
* Swarm Photo – ஒரு சோஷியல் மீடியா செயலி, நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்பதை பகிர்ந்து, அதன் புகைப்படத்தை அப்லோடு செய்ய வேண்டும். இதன் மூலம், உங்களின் அன்றாட நடவடிக்கைகள் அனைத்தும் சேகரிக்கப்படுகிறது.
* Business Meta Manager – மெடா நிறுவனத்தின் பிசினஸ் ஆப்
* Crypto Farm your Coin – நீங்களே சொந்தமாக கிரிப்டோ கரன்சி உருவாக்கலாம் என்ற ஆபத்தான செயலி

இதில் பெரும்பாலானவை கேமரா மற்றும் புகைப்பட எடிட்டிங் சம்மந்தப்பட்ட செயலிகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Comments

Popular posts from this blog