இரு மாவட்டச் செயலாளர்களை கட்டம் கட்டி தூக்கிய அன்புமணி: வந்த வேகத்தில் பதவி பறிப்பு!


இரு மாவட்டச் செயலாளர்களை கட்டம் கட்டி தூக்கிய அன்புமணி: வந்த வேகத்தில் பதவி பறிப்பு!


அண்மையில்பாமகசிறப்பு பொதுக்குழு கூட்டம் திருவேற்காட்டில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் இளைஞரணிச் செயலாளராக இருந்தஅன்புமணி ராமதாஸ்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக பாமக தலைவராக 25ஆண்டுகள் பணியாற்றிய ஜி.கே.மணிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

தலைவராக பொறுப்பேற்ற அன்றே இனி நிர்வாகிகள் மத்தியில் பேசிய அன்புமணி, “பாமக 2.0-வைச் செயல்படுத்துவோம். பாமக மற்ற கட்சிகளைப்போல இல்லை. வித்தியாசமான கட்சி. யாராவது தவறாக நடந்துகொண்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, அனைத்து நிர்வாகிகளும் நேர்மையாகச் செயல்பட வேண்டும். 100 சதவீதம் கட்டப் பஞ்சாயத்து, ரவுடித்தனம் இருக்கக் கூடாது. நான் கட்சிக்காகவும், தமிழக மக்களுக்காகவும் ஓயாமல் உழைப்பேன். 2026-ல் தமிழகத்தில் நிச்சயம் பாமக ஆட்சி அமைக்கும். மக்களுக்குப் பிரச்சினை ஏற்பட்டால், ஜல்லிக்கட்டு காளையைப்போல ஓடிவருவேன்” என்று கூறியிருந்தார்.

அந்த வகையில் தற்போது இரு மாவட்டச் செயலாளர்களின் பதவிகளை பறித்துள்ளார் அன்புமணி ராமதாஸ். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மந்தைவெளியை சேர்ந்த ர.ஸ்ரீராம் ஐயர் என்பவர் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால், கட்சியின் நலன் கருதி இவர் வகித்து வந்த தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து பாமக நிறுவனர் ராமதாஸ் ஒப்புதோடு இன்று முதல் விடுவிக்கப்படுகிறார். இனி இவர் கட்சியில் உறுப்பினராக மட்டுமே இருப்பார்.

உதயநிதி மூன்று நாள்களில் பதவியேற்பு? சொல்லாமல் சொன்னது என்ன?

அதேபோன்று, சென்னை வியாசர்பாடியை சேர்ந்த வெங்கடேச பெருமாள் என்பவர், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் கட்சியின் நலன் கருதி இவர் வகித்து வந்த வடசென்னை மத்திய மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து இன்று முதல் விடுவிக்கப்படுகிறார். இனி இவர் கட்சியில் உறுப்பினராக மட்டுமே இருப்பார்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

டைட்டானிக் கப்பலை பார்க்க நீர்மூழ்கியில் சென்று மாயமான 5 பேர்.. இறந்து விட்டார்கள்..?அதிர்ச்சி தகவல்

9 Little Ways You Can Raise Your Vibe Right Now #RightNow