கேன்ஸ் விழாவில் மோடி குறித்து மேடி சொன்ன கருத்தால் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்! நல்ல படத்திற்கு இப்படி ஒரு விளம்பரம் தேவையா மாதவன்!
கேன்ஸ் விழாவில் மோடி குறித்து மேடி சொன்ன கருத்தால் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்! நல்ல படத்திற்கு இப்படி ஒரு விளம்பரம் தேவையா மாதவன்!
கேன்ஸ் விழாவில் மாதவன் கூறியது:
இந்நிலையில் மாதவனின் ராக்கெட்ரி திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அதில் மாதவனின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. பின் விழாவில் கலந்து கொண்ட மாதவன் பிரதமர் மோடியை பற்றி கூறியிருந்தது, பிரதமர் மோடியின் “மைக்ரோ எகானாமி” திட்டம் வெற்றி பெற்றது. மோடி அவர்கள் விவசாயிகளுக்கு ஸ்மார்ட் போனை பயன்படுத்தவோ, வங்கி கணக்கை சரியாக கையாளத் தெரியாத ஒரு நாட்டில் டிஜிட்டல் மையத்தை உருவாக்கினார். இது சாத்தியமில்லை, பேரழிவை ஏற்படுத்தும் என்று உலகம் முழுவதும் சந்தேகத்துடன் பார்த்து வந்தனர் ஆனால், இரண்டு ஆண்டுகளில் கதையை மாறிவிட்டது என்று மைக்ரோ பொருளாதாரத்தை பயன்படுத்துவதில் இந்தியாவும் ஒன்றாக மாறியிருக்கிறது. விவசாயிகளின் வங்கியில் பணம் இருக்கிறதா என்பதை அறிய பெரிதாக கல்வி அறிவு தேவையில்லை. தொலைபேசி இருந்தால் போதும் என்ற நிலை வந்து இருக்கிறது. அது தான் புதிய இந்தியா என்று மாதவன் கூறி இருக்கிறார். இப்படி இவர் கூறி இருந்ததை இந்தியா குழுவை வழிநடத்தும் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
தற்போது இது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. மாதவனின் இந்த பேச்சை பா ஜ க ஆதரவாளர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். ஆனால், ஒரு சிலரோ மாதவனின் இந்த கருத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். எங்களை போல Atm வாசாலில் நின்று இருந்தால் தெரிந்து இருக்கும் என்று சிலர் கமன்ட் போட்டுள்ளார்கள். ஒரு சிலரோ விரைவில் உங்களுக்கு ஒரு பத்ம விருது கிடைத்துவிடும் என்றும் விமர்சித்து வருகின்றனர்.
Comments
Post a Comment