Vikram:கமலின் விக்ரம் படத்தை ஏன் தியேட்டரில் தான் பார்க்கணும்னு தெரியுமா?


Vikram:கமலின் விக்ரம் படத்தை ஏன் தியேட்டரில் தான் பார்க்கணும்னு தெரியுமா?


விக்ரம் படத்தை இந்த 5 காரணங்களுக்காக தியேட்டர்களில் தான் பார்க்க வேண்டும்.

விக்ரம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்திக்கும் விக்ரம் படம் ஜூன் 3ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகிறது. படம் ரிலீஸுக்கு முன்பே ரூ. 200 கோடி வசூல் செய்துள்ளது. விக்ரமின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமை பெரும் தொகைக்கு சென்றிருக்கிறது. இந்நிலையில் விக்ரம் படத்தை ஏன் தியேட்டர்களில் மட்டுமே பார்க்க வேண்டும் என்று பார்ப்போம்.

கமல் ஹாசன்

கமல் ஹாசன் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளாராம். படம் முழுக்க ஆண்டவர் ஆக்ஷன் மோடில் இருப்பாராம். சில பயங்கரமான ஸ்டண்ட் காட்சிகளில் எல்லாம் கமல் நடித்திருக்கிறாராம். அதனால் அவரின் ரசிகர்களுக்கு செம ட்ரீட் இருக்கிறது.

விஜய் சேதுபதி

கமலுக்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். அவரின் லுக்கே வேற மாதிரி இருக்கிறது. கமலும், விஜய் சேதுபதியும் மோதும் காட்சிகளை தியேட்டரில் பார்த்து ரசித்தால் தான் நன்றாக இருக்கும்.

ஃபஹத் ஃபாசில்

பிரபல மலையாள நடிகரான ஃபஹத் ஃபாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால் அந்த கதாபாத்திரமாகவே மாறி மிரட்டுவதற்கு பெயர் போனவர் ஃபஹத். முன்னதாக வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்துவிட்டார்.

லோகேஷ் கனகராஜ்

கமல் ஹாசனின் தீவிர ரசிகனான லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தை இயக்கியிருப்பதால் எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. லோகேஷ் தான் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் விக்ரம் படத்தில் காட்டியிருக்கிறாராம்.

அனிருத்

விக்ரம் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். அனிருத் இசையில் பாடல்கள் அருமையாக வந்துள்ளது. அதிலும் பத்தல பத்தல பாடலை எத்தனை முறை கேட்டாலும் பத்தல பத்தல என்கிறார்கள் ரசிகர்கள்.

Comments

Popular posts from this blog