டைரக்டர் மணிரத்னத்திற்கு கொரோனா தொற்று உறுதி!! மருத்துவமனையில் அனுமதி!!154019804
டைரக்டர் மணிரத்னத்திற்கு கொரோனா தொற்று உறுதி!! மருத்துவமனையில் அனுமதி!!
சென்னை : இந்தியாவின் தலைசிறந்த டைரக்டர்களில் ஒருவராக இருப்பவர் மணிரத்னம். டைரக்டர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர் என பலவற்றிலும் தனது திறமையை நிரூபித்து வருபவர்.
1983 ம் ஆண்டு பல்லவி அனுபல்லவி என்ற கன்னட படத்தின் முலம் டைரக்டராக அறிமுகமானவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற பல மொழிகளிலும் பல பிளாக் பஸ்டர் படங்களை இயக்கி பல விருதுகளை வென்றவர்.தமிழில் இவர் இயக்கிய முதல் படம் பகல் நிலவு.
1980 கள் துவங்கி தற்போது வரிசையாக ஏராளமான ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.மௌன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், தளபதி, ரோஜா, பம்பாய், இருவர், உயிரே, கன்னத்தில் முத்தமிட்டால்,அலைபாயுதே, ஆய்த எழுத்து, குரு, ராவணன், ஓ காதல் கண்மணி ஆகிய படங்களை இயக்கி இந்திய சினிமாவில் தனிக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.
இந்திய சினிமாவின் அடையாளமாகவும், தமிழ் சினிமாவின் பெருமையாகவும் கருதப்படும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்த படத்தின் டைரக்டர் மட்டுமின்றி, தயாரிப்பாளரும் இவர் தான். அந்த வகையில் படத்தின் ரிலீசிற்கான ஏற்பாடுகளை கவனித்து வந்தார்.
ஜூலை 8 ஆம் தேதி படத்தின் டீசர் வெளியிட்டு விழா பிரமாண்டமாக சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள ட்ரேட் சென்டரில் நடைபெற்றது. இதில் பேசிய மணிரத்னம் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக இதை மறக்காமல் நினைவில் வைத்திருக்கிறேன் என்றும், இதனை படமாக்க 3 தடவை முயன்றுள்ளேன் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் மணிரத்னத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக மணிரத்னம் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வர ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், நடிகை வரலட்சுமி உள்ளிட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது டைரக்டர் மணிரத்னமும் கொரோனா தொற்றிற்கு ஆளாகி உள்ளார்.
Comments
Post a Comment