அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் 200க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது57182459


அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் 200க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது


மதுரை கப்பலூர் டோல்கேட்டை அகற்றக்கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. இன்று திடீரென கப்பலூர் டோல்கேட் அருகே இன்றைய தினம் தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார். இதை அறிந்த காவல்துறையினர் உடனடியாக அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். அந்த பகுதியில் இருந்த அதிமுக தொண்டர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் 200க்கும் மேற்பட்டோர் தங்கள் ஆதரவை தெரிவித்து கடும் வெயிலையும் பொருட்படுத்தாது டோல்கேட் அருகே உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.

காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லாததால் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் அவருடன் உண்ணாவிரதம் இருந்த உசிலம்பட்டி தொகுதி எம்.எல்.ஏ.மற்றும் 200க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்தனர். சாலையில் அமர்ந்து உண்ணாவிரதப்போராட்டம் நடத்த அனுமதி இல்லாத காரணத்தால் காவல்துறை அனுமதி இல்லாததால் காவல்துறையினர் குண்டு கட்டாக கைது செய்தனர்

Comments

Popular posts from this blog