ரயில்வே ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. மத்திய அரசின் செம அறிவிப்பு..! #DA ரயில்வே ஊழியர்களுக்கு DA விகிதம் 189 சதவீதத்திலிருந்து 196 சதவீதமாக உயர்த்தப்பட்டு ஜூலை 1, 2021 முதல் நடைமுறைக்கு வரும், இதேபோல் ஜனவரி 1 2022 முதல் அகவிலைப்படி அளவீடு 196 சதவீதத்தில் இருந்து 203 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டு அமலாக்கம் செய்யப்படுகிறது என ரயில்வே அமைச்சகம் தனது அறிவிப்பில் தெரிவித்தது. ரயில்வே நிர்வாகம் தனது ஊழியர்களுக்கு DA கொடுப்பனவை தலா 7 சதவிகித்தை இரண்டு பகுதிகளாக அறிவித்துள்ளது. ஆதாவது 6வது ஊதியக் குழுவின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஜூலை 1, 2021 முதல் தனியாக 7 சதவீத உயர்வும், ஜனவரி 1 2022 முதல் தனியாக 7 சதவீத உயர்வும் அளிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 6வது ஊதியக் குழுவின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்த முறை DA அளவு 14 சதவீதம் அதிகரித்துள்ளது. 14 சதவீத உயர்வு மூலம் ரயில்வே ஊழியர்களுக்கு 203 சதவீதம் DA கொடுப்பனவை அளிக்கிறது மத்திய அரசு. ஜனவரி 1, 2022 முதல் அகவிலைப்படி உயர்வும் நடைமுறைக்கு வரும். மேலும் நவம்பர் 18, 1960 மற்றும் டிசம்பர் 31, 1985 க்கு இடையில் மத்திய அரசு பணியில் இருந்த...
Comments
Post a Comment