மாஸ்கோ திரைப்பட விழாவில் சாய் பல்லவி படம்134060701
மாஸ்கோ திரைப்பட விழாவில் சாய் பல்லவி படம்
சென்னை: சாய் பல்லவி நடிப்பில் திரைக்கு வந்த படம், ‘கார்கி’. கவுதம் ராமச்சந்திரன் இயக்கினார். ஆர்.எஸ்.சிவாஜி, காளி வெங்கட், கவிதாலயா கிருஷ்ணன், லிவிங்ஸ்டன், சரவணன் நடித்திருந்தனர். கோவிந்த் வசந்தா இசை அமைத்தார். இப்படத்தை சூர்யா, ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் வெளியிட்டது. ஜூலை 15ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் அதிக வரவேற்பு பெற்ற இப்படம், ரஷ்யாவில் நடந்த 44-வது மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. உலக வெற்றிப் படங்கள் வரிசையில் இப்படம் திரையிடப்பட்டது. ‘கார்கி’ படத்துடன் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா, சமந்தா நடித்த ‘புஷ்பா’ படம் திரையிடப்பட்டது. தவிர, மேலும் சில சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடவும் ‘கார்கி’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.
Comments
Post a Comment