சாதி பெயரைச் சொல்லி திட்டிய ஆசிரியை! 11ம் வகுப்பு மாணவன் தற்கொலை!
நாமக்கல் மாவட்டம், மோடமங்கலத்தைச் சேர்ந்த பழனிச்சாமி, செல்வி தம்பதியினருக்கு மூன்று மகன்கள். அவர்களில் 2வது மகனான ரிதுன் மோடமங்கலத்திற்கு அருகிலுள்ள தண்ணீர் பந்தல் பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில், ரிதுன் நேற்று காலை வகுப்பறையில் தன்னுடன் படிக்கும் சக மாணவியிடம் பேசிக் கொண்டிருந்ததை தவறாக புரிந்து கொண்ட பள்ளியின் தாவரவியல் ஆசிரியர் தெய்வாம்பாள், ரிதுனையும், அவனது பள்ளித் தோழியையும் கண்டித்து அடித்ததோடு, வகுப்பறையை விட்டு வெளியேச் சென்று வாசலில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நிற்க வைத்து அருந்ததியினர் பிரிவைச் சேர்ந்த ரிதுனை சாதியின் பெயரைச் சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ரிதுன், கடிதம் எழுதி வைத்து விட்டு பள்ளிக்கு அருகில் உள்ள ரயில் தண்டவாளத்தில் தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து விரைந்து வந்த ரயில்வே காவல் துறையினர், ரிதுனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவகல்லூரி மருத்துவமன...
என்ன பாத்தா அப்டியா தெரியுது.?! விஜய் சேதுபதி கடுப்பேற்றிய அந்த பெண்.! தமிழ் சினிமாவில் தனது நடிப்பின் மூலம் நல்ல ஒரு இடத்தை பிடித்து, நல்ல நடிகனாக வளர்ந்து நிற்கிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவரது திரைப்படங்கள் பெரிய வசூல் எல்லாம் செய்வது இல்லை. ஆனால், இவரது நடிப்பு பல உச்ச நட்சத்திரங்கலையே வியக்க வைக்கும் வண்ணம் இருக்கும். அதனால்தான் அடுத்தடுத்து உச்ச நட்சத்திரத்தின் படத்தில் இவர் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக விக்ரம் திரைப்படம் வரும் ஜூன் 3-ம் தேதி வெளியாக உள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன், பகத் பாசில் ஆகியோருடன் நடித்துள்ளார். விஜய் சேதுபதி நடிப்புக்கு எவ்வளவு ரசிகர்கள் ரசித்து பார்ப்பார்களோ, அதேபோல அவரது பேச்சுக்கும் ரசிகர்கள் ஏராளம். இவர் மிகவும் கஷ்டப்பட்டு நீண்டகாலமாக போராடி சினிமாத்துறைக்கு வந்தவர். அதனால், தனது அனுபவங்களை மக்களுக்கு தயங்காமல் சொல்லிவிடுவார். அதனாலேயே இவரது பேச்சு பலருக்கும் பிடித்த போய்விடும். இதுபற்றி அண்மையில் ஒரு பேட்டியில் விஜய் சேதுபதியுடன் தொகுப்பாளினி பேசும்போது, உங்களது பேச்சுக்கு நாங்கள் ரசிகர். அவ்வளவு ஆழமாக நீங்கள்...
Comments
Post a Comment