தமிழகத்தில் வெப்ப சலனம் நீடிப்பு 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும், என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான அசானி புயலுக்கு பிறகு தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவி வந்தாலும் வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது. கத்திரி வெயில் காலத்தில் புயல் காரணமாக பெய்த மழையால் வெப்பம் குறைந்துள்ளது சற்று ஆறுதலாக உள்ளது. இதற்கிடையே சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக கலசப்பாக்கத்தில் நேற்று 100 மி.மீ மழை பெய்துள்ளது. தஞ்சாவூரில் 80 மி.மீ, ஆரணி, பரூர், திருமானூரில் 70 மி.மீ, சிவலோகம், பேச்சிப்பாறை, ஒக்கனேக்கல், மாரண்டஹள்ளி, இடையப்பட்டி, புள்ளம்பாடி, நாட்றாம்பள்ளியில் 60 மி.மீ, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய... விரிவாக படிக்க >>