கடைசியில் ஜகா வாங்கிய எலான் மஸ்க்.. டிவிட்டர் நிர்வாக குழுவில் சேர மறுப்பு..!! டிவிட்டர் நிறுவனத்தின் முக்கியப் பங்குதாரராக மாறிய எலான் மஸ்க் இந்நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் சேர்வது பற்றித் தொடர்ந்து ஆலோசனை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த வாரம் டிவிட்டர் சிஇஓ பராக் அகர்வால் நிர்வாகக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிர்வாகக் குழுவில் சேர்க்க முடிவு செய்தார். டிவிட்டர் சிஇஓ டிவிட்டர் சிஇஓ பராக் அகர்வால் தனது டிவிட்டர் பதிவில், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க், டிவிட்டர் நிர்வாகக் குழுவில் சேரும் வாய்ப்பை மறுத்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார். டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் நிர்வாகக் குழுவில் சேர்ந்து புரட்டிப்போடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மஸ்க் எடுத்த முடிவு அதிர்ச்சியாக உள்ளது. பராக் அகர்வால் இதுகுறித்து பராக் அகர்வால், டிவிட்டர் நிர்வாகக் குழுவில் எலான் மஸ்க் சேர்வது பற்றிப் பல முறை ஆலோசனை செய்துள்ளோம், இணைந்து பணியாற்றுவதில் இருக்கும் பிரச்சனைகளைக் களைந்து நிர்வாகக் குழுவில் எலான் மஸ்க் இணைய இடம் அளிக்கப்பட்டது. இதற்...
என்ன பாத்தா அப்டியா தெரியுது.?! விஜய் சேதுபதி கடுப்பேற்றிய அந்த பெண்.! தமிழ் சினிமாவில் தனது நடிப்பின் மூலம் நல்ல ஒரு இடத்தை பிடித்து, நல்ல நடிகனாக வளர்ந்து நிற்கிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவரது திரைப்படங்கள் பெரிய வசூல் எல்லாம் செய்வது இல்லை. ஆனால், இவரது நடிப்பு பல உச்ச நட்சத்திரங்கலையே வியக்க வைக்கும் வண்ணம் இருக்கும். அதனால்தான் அடுத்தடுத்து உச்ச நட்சத்திரத்தின் படத்தில் இவர் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக விக்ரம் திரைப்படம் வரும் ஜூன் 3-ம் தேதி வெளியாக உள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன், பகத் பாசில் ஆகியோருடன் நடித்துள்ளார். விஜய் சேதுபதி நடிப்புக்கு எவ்வளவு ரசிகர்கள் ரசித்து பார்ப்பார்களோ, அதேபோல அவரது பேச்சுக்கும் ரசிகர்கள் ஏராளம். இவர் மிகவும் கஷ்டப்பட்டு நீண்டகாலமாக போராடி சினிமாத்துறைக்கு வந்தவர். அதனால், தனது அனுபவங்களை மக்களுக்கு தயங்காமல் சொல்லிவிடுவார். அதனாலேயே இவரது பேச்சு பலருக்கும் பிடித்த போய்விடும். இதுபற்றி அண்மையில் ஒரு பேட்டியில் விஜய் சேதுபதியுடன் தொகுப்பாளினி பேசும்போது, உங்களது பேச்சுக்கு நாங்கள் ரசிகர். அவ்வளவு ஆழமாக நீங்கள்...
கலைஞர் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும்! முதல்வர் அறிவிப்பிற்கு பிற கட்சிகள் வரவேற்பு இன்று தமிழக பேரவையில், 5 முறை முதல்வராகவும் 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்த கலைஞர் கருணாநிதியின் சாதனைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசினார். அப்போது அவர், "இதுதான் தமிழகத்தின் அடையாளங்கள் என்றால் அந்த அடையாளங்களை எல்லாம் உருவாக்கியவர் நம்முடைய முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் ஆவார். தமிழகத்தில் மட்டுமல்ல பரந்து விரிந்த இந்த இந்திய அரசியலுக்கு வழிகாட்டியாக இருந்தவர் தலைவர் கலைஞர் ஆவார். முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3 ஆம் நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் " என முதல்வர் ஸ்டாலின் கூறினார். மேலும் அவர், " சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் கம்பீர தோற்றத்துடன் முத்தமிழ் அறிஞர் கலைஞர் சிலை நிறுவப்படும் " என்று அறிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்பிற்கு ஆதரவு தெரிவித்து பிற உறுப்பினர்கள் பேசினர். வேல்முருகன் பேச்சு : 60ஆண்டு காலம் மாமன்றத்திலும், 19ஆண்டு காலம் முதல்வராகவும், உலக தமிழர்களின் உரிமை குரலாகவும் தலைவர் கலைஞர் அவருக்கென்றே எடுத்த அற்புதமான சொற்களாக உள்ளது...
Comments
Post a Comment