தர்மபுரி மாணவி தீக்குளித்து தற்கொலை! வாக்குமூலத்தில் வெளியான சோகம் மாணவிகளின் தற்கொலைப் படலம் தொடர்வது தமிழகத்தையே உலுக்கி வரும் நிலையில், மற்றுமொரு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். தர்மபுரியை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர், வீட்டில் தனியாக இருந்த போது தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இறப்பதற்கு முன்னதாக தீக்குளித்த மாணவி அளித்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடைசி நொடியில் அளித்த வாக்குமூலம் மூலம் வெளியான தகவல் அதிர்ச்சி ஏற்படுத்துகிறது. வீட்டில் தனியாக இருந்தபோது தற்கொலை செய்துக் கொள்ள முயன்ற மாணவி உடலில் தீ வைத்துக் கொண்டுள்ளார். ஆனால், தீ பற்றியதும் வலி தாங்க முடியாமல் அலறியிருக்கிறார். மாணவியின் வலியுடன் கூடிய அலறல் சத்தம் தெரு முழுக்க எதிரொலித்துள்ளது. பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு, ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்தார். உயிரிழப்பதற்கு முன்னர் மாணவி அளித்த மரண வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் தகவல்கள...