தர்மபுரி மாணவி தீக்குளித்து தற்கொலை! வாக்குமூலத்தில் வெளியான சோகம்687803149


தர்மபுரி மாணவி தீக்குளித்து தற்கொலை! வாக்குமூலத்தில் வெளியான சோகம்


மாணவிகளின் தற்கொலைப் படலம் தொடர்வது தமிழகத்தையே உலுக்கி வரும் நிலையில், மற்றுமொரு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.  தர்மபுரியை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர், வீட்டில் தனியாக இருந்த போது தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இறப்பதற்கு முன்னதாக தீக்குளித்த மாணவி அளித்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடைசி நொடியில் அளித்த வாக்குமூலம் மூலம் வெளியான தகவல் அதிர்ச்சி ஏற்படுத்துகிறது.

வீட்டில் தனியாக இருந்தபோது தற்கொலை செய்துக் கொள்ள முயன்ற மாணவி உடலில் தீ வைத்துக் கொண்டுள்ளார். ஆனால், தீ பற்றியதும் வலி தாங்க முடியாமல் அலறியிருக்கிறார். மாணவியின் வலியுடன் கூடிய அலறல் சத்தம் தெரு முழுக்க எதிரொலித்துள்ளது.

பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு, ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்தார்.

உயிரிழப்பதற்கு முன்னர் மாணவி அளித்த மரண வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. சிகிச்சை பெற்று வந்த மாணவிக்கு தன்னிலை இருந்தபோது தனது தற்கொலைக்கான காரணத்தை அவர் தெரிவித்துள்ளார்.

முனிரத்தினம் என்பவரை தான் காதலித்து வந்ததாகக் கூறிய மாணவி, தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு தள்ளப்பட்டதாக மாணவி வாக்குமூலம் அளித்ததாக தெரிகிறது. மாணவியின் மரணம் குறித்து பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

உயிரிழந்த மாணவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், மாணவி காதலித்து வந்த முனிராஜ் யார் என்பது தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

Comments

Popular posts from this blog

டைட்டானிக் கப்பலை பார்க்க நீர்மூழ்கியில் சென்று மாயமான 5 பேர்.. இறந்து விட்டார்கள்..?அதிர்ச்சி தகவல்

9 Little Ways You Can Raise Your Vibe Right Now #RightNow