2வது திருமணம் செய்ததால் ஆத்திரம் கணவனை கம்பத்தில் கட்டி செருப்பால் அடித்த மனைவி1944380552


2வது திருமணம் செய்ததால் ஆத்திரம் கணவனை கம்பத்தில் கட்டி செருப்பால் அடித்த மனைவி


தெலங்கானாவில் 2வது திருமணம் செய்த கணவரை மின் கம்பத்தில் கட்டி வைத்து செருப்பால் அடித்த மனைவி அவருக்கு செருப்பு மாலையும் அணிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தெலங்கானா மாநிலம், பெத்தப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மாந்தனி அடுத்த ஸ்வர்ணபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அகிலா. இவருக்கும் ஸ்ரீகாந்த் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது அகிலாவின் பெற்றோர் ஸ்ரீகாந்த்க்கு வரதட்சணையாக ரூ.20 லட்சம் கொடுத்தனர். இருவருக்கும் மகன் பிறந்த நிலையில் ஸ்ரீகாந்த் மனைவியை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

பின்னர், ஸ்ரீகாந்த் வாரங்கலில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார். அகிலாவுக்கு இந்த விவகாரம் தெரியவந்தது. இதனால், அகிலா தனது குடும்பத்தினர் உதவியுடன் ஸ்ரீகாந்த்தை ஹன்மகொண்டாவில் இருந்து ஸ்வர்ணபள்ளிக்கு நேற்று அழைத்து வந்தனர். பின்னர், ஸ்ரீகாந்த்தை மின் கம்பத்தில் கட்டி வைத்து செருப்பால் அடித்து செருப்பு மாலை அணிவித்தார். தகவலறிந்து வந்த போலீசார் ஸ்ரீகாந்த்தை மீட்டனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Comments

Popular posts from this blog