#IPL2022: டாஸ் வென்ற மும்பை.. 4-வது அணியாக பிளே ஆப்ஸ் சுற்றுக்கு நுழையுமா டெல்லி? ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 69-வது போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடர் தற்பொழுது இறுதிக்கட்டத்தை நெருங்கும் நிலையில், இன்று நடைபெறும் 69-வது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் டெல்லி அணி வெற்றிபெற்றால், பிளே ஆப்ஸ் சுற்றுக்குள் நுழையும் கடைசி அணியாகும். ஒருவேளை தோல்வியை சந்தித்தால் பெங்களூர் அணி பிளே ஆப்ஸ் சுற்றுக்கு தகுதிபெற்றுவிடும். அதன்காரணமாக இன்றைய போட்டி விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விளையாடும் வீரர்கள்: டெல்லி கேபிட்டல்ஸ்: பிருத்வி ஷா, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), சர்பராஸ் கான், ரோவ்மன் பவல், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, கலீல் அகமது. ம...