தமிழகத்தில் நாளை வழக்கம் போல் பேருந்துகள் இயங்குமா?.. தொமுச தகவல் விலை வாசி உயர்வு, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கண்டிப்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த 12 அம்ச கோரிக்கைகள் பின் வருமாறு, தொழிலாளர் சட்டங்களை லேபர் கோட்ஸ் என்ற பெயரில் தொழிலாளர் விரோதச் சட்டங்களாக மாற்றியதை ரத்துசெய்ய வேண்டும், அத்தியாவசிய பாதுகாப்புப் பணிகள் சட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும், சம்யுக்த கிசான் மோர்ச்சா முன்வைத்துள்ள இதர ஆறு கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது, அங்கன்வாடி,‘ஆஷா’ ஊழியர்கள், மதிய உணவு ஊழியர்களுக்கும் இதரத் திட்ட ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியத்துடன் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், முறைசாராத் தொழிலாளர்கள் அனைவருக்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களைக் கொண்டுவர வேண்டும், வருமானவரி செலுத்தாத அனைத்துக் குடும்பத்தினருக்கும் மாதந்தோறும் 7,500 ரூபாய் அளிக்க வேண்டும், மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின் கீழ் ஒதுக்கீ...